புதன், 17 நவம்பர், 2010

நாள் ஒழுக்கங்கள் -

நோய் அணுகா வாழ்க்கை முறைக்கான சில 
வழி ( விதி )முறைகள் 
1.    வாரம் ஒரு முறை எண்ணையிட்டு தலை முழுக வேண்டும்,
2.    எண்ணையிட்டு தலை முழுகும் போது வென்நீரிலேயே குளிக்க வேண்டும்,
3.   இரவில் பசும்பாலையே உண்ணவேண்டும்,
4.   பகற்பொழுதில்  உடலுறவும், தூக்கமும் கூடாது ,
5.   வயதிற்கு மூத்த மாதருடன்  உடலுறவு கூடாது,
6.   மலம், சிறுநீர் ஆகியவைகளை அடக்க கூடாது,
7.   இடக்கையை கீழமைத்து உறங்க வேண்டும்,
8.   முதல் நாள் சமைத்த காய் கறிகளை உண்ணக் கூடாது,
9.   பசித்தாலொழிய உண‌வருந்த கூடாது
10.  உணவு உண்ட பின்பே நீர் அருந்த வேண்டும்
11.  கிழங்கு வகைகளில் கருணைக் கிழங்கு மட்டுமே உண்ண வேண்டும்,
12.  வாழைப் பிஞ்சு உண்ண சிறந்தது,
13.  உண்ட பின் சிறிது நேரம் குறு நடை சிறந்தது,
14.   ஆறு திங்கட்கொருமுறை வாந்தி மருந்தையும், நான்கு திங்கட்கொருமுறை   .......பேதி      மருந்தையும் எடுத்து கொள்ள வேண்டும்
15.   ஒன்றரை மாதத்திற்கு ஒரு முறை நசியம் ( மூக்கில் மூலிகை பொடியை ........உறிவது,   இதை பின்னால் பார்ப்போம்) செய்து கொள்ள வேன்டும்.
16.   வாசனை பொருட்களையும் பூக்களையும் நடு இரவில் நுகரக்கூடாது,
17.    கெட்ட மண‌ம் , தூசி  இவைகள் உடம்பில் படும்படி நெருங்க கூடாது,
18. மூன்று நாட்களுக்கொருமுறை கண்களில் மை இட வேண்டும்,
19. உணவு சீரனமாகும் சமயத்தில் உடலுறவு கூடாது,
20. இரவில் மர நிழலில் தங்ககூடாது,
21. நகங்களையும், முடியையும் எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள ......வேண்டும்,
22. எப்போதும் நீரைக் காய்ச்சியும் , நெய்யை உருக்கியும் , தயிரை மோராக்கியும்    ........மட்டுமே உண்ண வேண்டும்,





1 கருத்து:

  1. அய்யா
    பதிவுகளை வழக்கம் போல கருப்பு ண்ணத்திலேயே எழுதினால் படிக்க வசதியாக இருக்கும்.மேலும் ஒவொரு பதிவும் மிக குறைவாகவே உள்ளது.நிறைய விஷயங்களை ஒரு தலைப்பில் எழுதலாமே
    நன்றி

    பதிலளிநீக்கு