வெள்ளி, 9 மார்ச், 2012

மாரடைப்பு ஏற்படுவது ஏன் ?

மாரடைப்பு ஏற்படுவது ஏன் ?

                            இருத்து ரோகம் , தமரகவாயு , தமர்வாதம் , இருதய ரோகம் , இருதய வாயு, நெஞ்சடைப்பு , உருத்திரரோகம் , நெஞ்சு வலி என்றெல்லாம் கூறப்படுவதும் , கொள்ளை நோய்ப்போல் நொடிக்குள் ஆளை கொன்று விடுவதுமாகிய கொடிய நோயே மாரடைப்பு எனப்படும் .

                            அழித்தல் கடவுளாகிய உருத்திரனின் உறைவிடமாகிய அனாகதம் என்ற  மார்புப் பகுதியில் இந்நோய் ஏற்ப்படுவதால் இதற்க்கு உருத்திரவாதம் என்ற சிறப்பு !! பெயரும் உண்டு . இது மூளைக்கு மிகுதியாக வேலை தருதல் - மிகு கவலை - அதிர்ச்சி - நீரிழிவு - கீல்வாதம் -  உடலுழைப்பின்மை , நரம்பு சூலை , இரைப்பிருமல் , செரியாமை , கொழுப்பு , வாயுப்பண்டங்களை அதிகம் உண்ணல் ,   செரியாமை , இருதய பலவீனம் , மார்பில் பலத்த அடி விழுதல் , நிணநீர் கெட்டு இருதயத்தில் தங்குதல் , தமரக பகுதியில் கொழுப்பு தங்குதல் , மது , புகையிலை இவற்றால் ஏற்படும் ..  

                         இதில் தோடமீருவதினால் குறிப்பாக வாயு சினமுறுவதால் - இருதயத்தை நெருக்கி  - இருதயப் பகுதிகளில் தமரக நரம்புகளில்  தாங்கவியலாத கொடுமையான வலி - குத்தல் - மூச்சு விட முடியாமல் திணறல் - வியர்வை - மயக்கம் -இளைப்பு - பொறிபுலன் குன்றல் - நெஞ்சடைப்பு கண்டு உடனே கொல்லும். நின்றும் கொல்லும் .

                         இது பொதுவாக கொழுப்பு சத்து மிகுந்து நாற்ப்பது வயதுக்கு மேற்ப்பட்ட வயதினருக்கு - குறிப்பாக தீவிர உடல் உழைப்பு . மலையேற்றம் . வயிறு முட்டஉண்ணல . இவற்றிற்கு பிறகு முதல் முறையாக தோன்றும் . இது அடுத்தடுத்து வருவதில் தான் ஆபத்து அதிகம் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக