முன்னுரை
தமிழ் கூறும் நல்லுலகத்தில் சிறந்து விளங்கும் சித்த மருத்துவம் உலகிற்கே கிடைத்த ஒரு அரிய பொக்கிஷமாகும் . உயிரின் நெடு நாளைய வாழ்விற்கும்
மேம்பாட்டிற்கும் வழி காட்டுகிறது. இவ்வகையான உய்வுறும் நெறி முறைகளை ஆய்ந்து தெளிந்தவர்களே சித்தர்கள். இவர்கள் மருத்துவம், யோகம் ,ஞானம் ஆகியவற்றை ஆய்ந்து தெளிந்து அறம் , பொருள், வீடு , இன்பம் ஆகிய பேறுகளை அடைந்து நெடிய நல்வாழ்வை பெரும் பொருட்டு சிறந்த மருத்துவ முறையை கண்டனர்: அதுவே சித்த மருத்துவமாகும்.
மானிடரின் உடல் , உள்ளம் , உணர்வு , ஆகியவைகளை உள்ளடக்கிய 96 நிலைகளை சித்த மருத்துவம் தனது அடிப்படை கூறுகளாக கொண்டுள்ளது . இவ்வனைத்துமே ஐம்பூதங்களின் விரிவு நிலைகளே ஆகும்.
உலகில் உள்ள மனிதனுக்கும் அவனை சுற்றியுள்ள உலகிற்கும் உள்ள சீரான நிலையே "நோயற்ற நிலை" அல்லது " இயல்பான உடலியக்க நிலை " ஆகும் . இந்த தத்துவங்களில் மாறுபட்டால் ஏற்படும் நிலையே " நோய் நிலை" ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக