 |
பொடுதலை |
பொடுதலை சாதாரணமாக நிலத்தில் வளரும் ஒரு குறுஞ் செடியினமாகும். இதன் இலைகளை நல்லெண்ணையில் இட்டு நன்றாக காய்ச்சி வெயிலில் வைத்து விட்டு பின் எடுத்து தலையில் தடவி வந்தால் பொடுகு முற்றிலும் குணமாகும். மேலும் முடி உதிரல் கட்டுப்படும். இதனுடன் வீட்டில் நாம் உபயோகபடுத்தும் ஹேர் ஆயில் உடன் இதை சேர்த்தும் பயன்படுத்தலாம்.
ஐயா,
பதிலளிநீக்குஉபயோகமான தகவல்.
இது போன்ற மூலிகைகளைப் பற்றி இதழ்களில் படிக்கின்றோம். இவைகள் எங்கு கிடைக்கும் என்ற விவரங்கள் கிடைப்பதில்லை.
அதுபற்றியும் குறிப்பிட்டால் நலமாக இருக்கும்.
மா.மணி
இதுபோன்ற குறு சிறு செடியினங்கள் சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக அழிந்து வருகின்றன. எனது சிறுவயதில் எங்களது பகுதியில்(கும்மிடிப்பூண்டி) பரந்து விரிந்திருக்கும் ஈரப்பதமான வயல்வெளிகள், குளக்கரைகள், ஏரிக்கரைகள் போன்ற இடங்களில் வளர்ந்திருக்கும். எனது தாயார் இந்த பொடுதலைக்கீரை மற்றும் காய் இவைகளைப் பயன்படுத்தி நோய்களைப் போக்குவார்கள். ஆனால் இப்பொழுது இச்செடியைக் காண்பதே மிக அரிதாக உள்ளது.
பதிலளிநீக்கு