நோயாளியின் முறையீடு | இருமல் , சளி , மூக்கில் சளி ஒழுகல் . |
நோயின் அறிகுறிகள் | மூக்டைத்தல் , தும்மல், மூக்கில் அரிப்பு சளி வெளிப்படல், சுறுசுறுப்பின்மை, சுரம் மற்றும் உடல் வலி , . |
நோய் குணங்கள் | மூக்கு சளி , கண்ணில் நீர் வடிதல் , சுரம், |
நோய் கணிப்பு | இருமல் , சளி , |
மருத்துவம் :- தயாரித்த மருந்து :- 1. தாளிசாதி சூரண மாத்திரை இரண்டு தினம் இரு வேளை அல்லது மூன்று வேளை வெந்நீரில் சாப்பிடவும் . 2. ஆடாதோடை மணப்பாகு ஐந்து முதல் பத்து மிலி வரை அரை தம்பளர் வெந்நீருடன் கலந்து தினம் இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிடலாம் . சுரமும் குறையும். கைப்பக்குவ மருந்து :- ஆடாதோடையின் ஐந்து இலைகளை எடுத்து நடு நரம்பை நீக்கி அத்துடன் பத்து மிளகு , ஒரு பிடி துளசி இலைகள் , இரண்டு வெற்றிலை ஆகியவைகளை ஒன்றிரண்டாக இடித்து 300 மிலி நீர் விட்டு மூடிய பாத்திரத்தில் விட்டு நன்றாக கொதிக்க விட்டு 75 மிலி ஆனவுடன் வடிகட்டி குடிக்கவும். இதை தினம் இரு வேளை அல்லது மூன்று வேளை சாப்பிடலாம். தவிர்க்க வேண்டியவை :- குளிர்ந்த பொருட்கள், புளித்த தயிர் . மருத்துவ அறிவுரைகள் :- மிளகு ரசம் அல்லது தூதுவேளை ரசம் சூடான சாதத்துடன் , ஆவிபிடித்தல் ( நொச்சி இலை போட்ட கொதிக்கும் நீரில் ) பிற காரணங்கள் :-
|
KNOW ABOUT ANCIENT TAMIL SIDDHA MEDICINES (சித்த மருத்துவம் பற்றிய ஒரு முழுமையான மருத்துவ கையேடு)
திங்கள், 30 மே, 2011
இருமல் , சளி COUGH AND COLD
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வள்ளலார் ஞான மூலிகை காலையில்
பதிலளிநீக்கு1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி
2 தூதுளையிலை
3 முசுமுசுக்கையிலை
4 சீரகம்
இவைகளின் சூரணம்(powder- avilable in all khadi stores)
நல்ல ஜலம்(water), பசுவின் பால் மற்றும் நாட்டு சர்க்கரை இவைகள் கலந்து சுண்டக் காய்ச்சியது
http://sagakalvi.blogspot.com/2011/10/blog-post_04.html