திங்கள், 30 ஜனவரி, 2012

உடலின் வேகங்களும் - அவற்றை அடக்குவதால் உண்டாகும் விளைவுகளும் - பகுதி - 1

உடலின்  வேகங்கள் -- உடலின் வேகங்கள் என்பது இயற்கையாய் உண்டாகும் அபான வாயு , தும்மல் , இருமல் , இளைப்பு , சிறுநீர், மலம் , கொட்டாவி , பசி , தாகம் , தூக்கம் , வாந்தி , கண்ணீர், விந்து , சுவாசம் என பதினான்கு வகைப்படும்.

வேகங்களை  அடக்குவதால் உண்டாகும் விளைவுகள்   - பகுதி - 1 

அபான வாயுவை அடக்கினால்  --  அபான வாயுவை உரிய முறையில் வெளி விடாமல் தடுப்பதால் மார்பு நோய் , வாதக் குன்மம் , குடல் வாயு , உடல் முற்றும் குத்தல் , குடைச்சல், வாதம், மல சல தடை , பசியின்மை முதலியன விளையும் .

தும்மல் - கொட்டாவி இவற்றை அடக்குவதால்- தும்மலை அடக்கினால் தலை நோவு ,பொறியும் புலனும் தெரித்து விழுவது போல் தோன்றல் , இடுப்பு வலி , முகம் கோணல் முதலியவை காணும். கொட்டாவியை அடக்கினால் தும்மலை அடக்குவதனாலான குறிகளுடன் முகம் வாடல் , இளைப்புகுறி , செரியாமை , நீர் நோய் , வெள்ளை நோயினால் அறிவு மயக்கம், வயிற்று பிணி ஆகியவை உண்டாகும்,  

தொடரும் .........
 
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக