செவ்வாய், 31 ஜனவரி, 2012

உடலின் வேகங்களும் - அவற்றை அடக்குவதால் உண்டாகும் விளைவுகளும் - பகுதி - 2

வேகங்களை  அடக்குவதால் உண்டாகும் விளைவுகள்   - பகுதி -2 

மலம்  - நீரை   அடக்கினால்  --  மலத்தை அடக்கினால் அபான வாயு பெருகி அடக்கிய மலத்தை தள்ளும். மேலும் மலத்தோடம் , முழங்காலின் கீழ்த்தன்மையான நோய் , தலை வலி , ஒலியுடன் வாயு பிரிதல் , பலவீனம் , மல நீர்க்கட்டு , முதலியன விளையும் .

சிறுநீரை அடக்குவதால்- சிறு நீரை  அடக்கினால் நீரடைப்பு , நீரிறங்கும் புழை புண்ணாய் எரிதல் , ஆண்குறி சோர்ந்து  குத்தல் , கீல்களில் வலி , வயிற்றில் அபான வாயு நிறைதல் முதலியவை காணும். 
பசி தாகத்தை -- அடக்கினால்  உடலுறுப்புகள் செயல் குன்றி சூலை , பிரமை , உடலிலைப்பு , முகவாட்டம் , வலி ஆகியவையும் நாளடைவில் மூலசூடு கண்டு , தாதுவற்றி சய நோயும் காணும்.

தொடரும் ---------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக