பிள்ளை - சவலை பாய்தல் என்றால் என்ன ?
பொதுவாக மாதாந்திர முழுக்கான பெண்ணின் பார்வக்குள்ளாக்கப்பட்ட குழந்தைக்கு காணும் ஒரு வகை இளைப்பு நோயே சவலை பாய்தல் எனப்படும் . மேலும் மாத முழுக்கான பின் கருப்பத்தை நாடி குழந்தைகள் முகத்தில் விழித்து , அன்றிரவு கணவனை கூடி கருவுற்றால் , அக்குழந்தை நாளுக்கு நாள் உடல் இளைத்து , பலவீனமுற்று , தோடக்குற்றம் பெருகி மிகத்துன்பம் அடையும். அதோடு அக்கருப்பிணி குழந்தை பெற்றவுடன் , தோடமுற்ற அந்த சவலை குழந்தை இறந்துவிடுவதும் உண்டு. நிற்க . கைக் குழந்தையாயிருக்கும்போது , ஒருவள் கருப்பமுற்று அச்சமயத்தில் கைக் குழந்தைக்கு பால் கொடுப்பதினாலும் - அல்லது கருவுற்றதால் பால் கொடுக்காமல் குழந்தையை ஏக்கமுற செய்வதாலும் - விபரமறியுமுன்னே அடுத்த குழந்தை வந்து விடுவதால் அதனை கண்டு குழப்பமும் , தன்னை கவனிக்க வில்லையே என்ற மன ஏக்கமும் சவலை நோய் ஏற்பட காரணமாகும். ( சவலை பருவம் என்பது ஒரு வருட காலமாகும் )எனவே கண்டிப்பாக இரு குழந்தைகளுக்கிடையே குறைந்தது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் இடைவெளி வேண்டும்.
Excellent Ashok. This is what happening to my Daughter now. Paining period in our life now a days. Thanks a lot for the valuable information. Please provide your contact number, I will talk to you.
பதிலளிநீக்குSaravanan.S (saravana221078@hotmail.com)