ஞாயிறு, 29 ஜனவரி, 2012

ஆன்மா--ஒரு விளக்கம்

ஆன்மா (ஆத்துமா) என்றால் என்ன ? 

              திருமூர்த்தி   வடிவமாகிய பரமாத்மாவே ஆன்மா எனப்படும். இது ஜீவாத்மா - பரமாத்மா என இருவகைப்படும். பரமாத்மாவினுள் ஜீவாத்மா ஐக்கியப்பட்டதாகும். இதனால் தான் சீவாத்மா பிரம்மரந்திரம் வழியாக உடலில் புகுந்து , மூளையை அனுசரித்து அவ்வழியாகவே ஆக்கினையை இயக்கி முடிக்கும். ஆன்மா ஒன்றே உலகின் மூலப்பொருளாகவும் - மற்ற யாவுமே சேர்க்கை பொருளாகவும் கருதப்படும். உடலும் மனமும் அத்தகையதே. ஆத்மா பிற விபரங்களை தானாகவே அறிவதால் தனக்கு தானே விளங்கும் தன்மை உடையது. உடலின் மலங்கள் யாவும் கழிந்து - மனதின் மும்மலங்களும் அறவே ஒழிந்து தூய்மை அடையும் பொழுது தான் ஆன்மா சக்தி சகலத்திலும் பிரவர்த்திக்க காரணம் ஏற்படும்.
             இது ஒன்றே ஆயினும் ஆன்மா - முமூட்சு - நித்தியா முக்தன் - சீவன் முக்தன் என நான்காக விளக்கப்படும். சுத்த சத்துக்கள் தொடர்பாக உடல் முற்றும் பரவி நிற்கும் சுத்த சூக்கும தத்துவமாகிய ஆன்மா எந்த வடிவிலும் பொருந்தியதல்ல. பிற தத்துவங்களைப் போல் அழியக்கூடியதல்ல.  சகல உயிர்களிலும் சமமாக அமைந்துள்ளது.மனதிற்கெட்டாதது பூதமுமின்றி  , பிரகிருதியுமின்றி , சுயம்புவாய்   தனக்கு தானே விளங்க கூடியது .  பேதமும் நிறமும் அற்றது -- பிறப்பற்றது -- நித்தியமானது--மாறாதது -- சூக்குமத்தில் சூக்குமமானது --பெரிதினும் பெரிதானது காலத்தில் தோன்றி அழியும் பொருளல்ல - எப்போதும் அழியாத்தன்மையுடயது . ஆதியும் அந்தமும் அற்றது , இதை சித்தர்களால் மட்டுமே அறிய இயலும்.  

2 கருத்துகள்: