கனவுகளினால் ஏற்படும் - பிணிகள் யாவை ?
ஒருவனுக்கு தோன்றும் கனவுகளின் நிலைக்கு ஏற்ப நன்மை தீமைகளும் பலவித பிணிகளும் தொடரும் என்பது சித்தர்களின் கூற்றாகும். குறிப்பாக சில விசயங்களை மட்டும் இங்கு பகிர்வோம்..
பிணங்களுடன் மது அருந்திகொண்டு நாயினால் வலிந்து இழுக்கபடுவதாக கனவு கண்டால் - சுர நோய் வரும்.
சிவந்த உடலும் சிவப்பு மாலை அணிந்து அல்லது சிவப்பு உடையணிந்து வந்தால் இரத்த பித்த நோய் வரும் .
எருமை,நாய் , பன்றி , கழுதை , ஒட்டகம் இவற்றில் ஏறி பயணம் செய்வதாக கனவு கண்டால் சய நோயினால் பீடிப்பர் .
தன் மார்பில் பனை அல்லது முட்செடி முளைப்பதாக கனவு கண்டால் குன்ம வலியினால் அவதிப்பட நேரும்.
உடலில் ஆடையின்றி நெய் பூசி சுடரில்லாத தீயில் யாகம் செய்வதாக , பின் தன் மார்பில் தாமரை உண்டாவதாக கனவு கண்டால் குட்ட நோய் வரும்.
தீயவர்களுடன் கூடி பலவித திரவங்களை அருந்துவதாக கனவு கண்டால் பிர மேகம் தாக்கும்.
அரக்கர்களுடன் நடனமாடி நீரில் மூழ்குவதாக கனவு கண்டால் வெறி நோய் உண்டாகும்.
சூரிய - சந்திர கிரகணங்களை கண்டால் கண் நோயும் , சூரிய - சந்திரன் வானில் இருந்து விழுவதாக கனவு கண்டால் கண் குருடும் ஏற்படும்.
கழுதை , புலி, பூனை , ஒட்டகம், குரங்கு , பன்றி , பிணம் , நரி இவற்றில் ஏறி பயணம் செய்வதாக கனவு கண்டால் முக்குற்ற நோயினாலும், முறையே துன்பமும் , மரணமும் , விளையும் எனவும் அறியவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக