செவ்வாய், 24 ஜனவரி, 2012

மகப்பேறு கிடைக்க -சப்த சந்தான தருமம் -

சப்த சந்தான தருமம்

                  சப்த சந்தான தருமம் என்பது , ஒருவருக்கு மகப்பேறு கிட்டாமைக்கு உடல் பொருத்தமின்மை , நோய்  ,  இவை தவிர - மனிதர் செய்யும் சில பாவ செயல்களும் காரணமாகும் என்பதால் அதற்கு பிராயசித்தமாக தான தருமங்கள் செய்ய வேண்டும் என கூறப்படும். கன்மகாண்டம் மற்றும் ஜோதிட நூலின் படி , முற்பிறவியில் செய்த பாவத்திற்கு நட்ட ஈடாக , பரிகாரம் செய்வது மட்டும் போதாது எனவும் , நற்கதி அடைய வேண்டி பொது நலப்பணிகளுக்கு உதவவும்   வேண்டும் எனவும் கூறப்படும். அப்படி கூறியுள்ள சப்த சந்தான தருமங்கள் ஏழு வகைப்படும்

           அவையாவன ,

                        ௧.          தரும கைங்கரியங்கள் 
                        ௨.         மத வழிபாட்டு உதவிகள் 
                        ௩.         ஏழைகளுக்கு அன்னம் வழங்குதல் 
                        ௪.         ஏரி குளங்களை செப்பனிடல்   
                        ௫.        பொதுக்கிணறு குளங்கள் வெட்டல்
                        ௬.        நல்ல நூல்களை வெளியிடல் அல்லது இயற்றுதல் 

ஆகியவைகளாகும். இவ்வகை நற்பணிகளால் குழந்தை பிறக்க தடையாயுள்ள பாவம் நீங்கி மகப்பேறு கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக