புதன், 25 ஜனவரி, 2012

சாமுத்திரிகா லக்ஷணம்

அங்கவிலக்கினம் சாமுத்திரிகா லக்ஷணம் என்றால் என்ன ? 

                 ஈசனால் உமையவளுக்கும் , பின் அகத்தியரால் இவ்வுலகினர்க்கும் எடுத்தோதப்பெற்ற  அங்கவிலக்கினம் (சாமுத்திரிகா லக்ஷணம்) என்பது , மானிடரனைவரும் பிறவியிலேயே தத்தமது சகல உடலுறுப்புகளின் நீள அகலம் , நிறம் , மச்சம் ,ரேகை போன்ற பலவிதமான தோற்ற அமைப்புகளின் தன்மைகளுக்கேற்ற பலாபலன்களே அடைவதாகக் கூறி விளக்கப்படுவதேயாகும். பொதுவாக மனிதர்களுக்குரிய பல இலட்சனங்களிலும் முக்கியமானவை   -  32  எனவும் , அவற்றுள் முறையே  கண் , கை , மூக்கு , கதுப்பு , முழங்கால் , இவை ஐந்தும் நீண்டும் --- பல் , விரல் , நகம் , தோல் , மயிர் இவை ஐந்தும் மிருதுவாயும் --- மார்பு , வயிறு , நெற்றி , அக்குள் , தோள்கள் , புறங்கை இவை ஆறும் உயர்ந்தும் --- கடைக்கண் , உதடு , உள்ளங்கை , உள்ளங்கால் , நகம் , வாய் , ஆண்குறி இவை ஏழும் சிவந்தும் --  கழுத்து , முழங்காலின் கீழ் , ஆண்குறி  இவை மூன்றும் குறுகியும்  ---- உந்தி , நடுமார்பு , நெற்றியின் கீழ்பாதி , இவை மூன்றும் தாழ்ந்தும் இருக்க வேண்டும் , இவை அனைத்தும் அப்பழுக்கின்றி அமையப்பெற்றவன் சகல நலன்களும் பெற்ற தலைவனாக விளங்குவான் எனவும் ,  மற்ற மாறுபட்ட அமைப்புடன் உடையவர்கள் அதனதற்குரியதான அளவில் வாழ்வில் ஏற்ற தாழ்வு, வலிமை , பிணி , அறிவு , மூடத்தனம் போன்றவற்றையும் அடைவான் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக