வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

உடற்கூறு - உடலியல்

உடற்கூறு - உடலியல் 

               இந்த அத்தியாயத்தில் நாம் உடற்கூறு - உடலியல் பற்றி தெரிந்து கொள்வோம். அதாவது ஐம் பொறியின்   இருப்பிடம் , இரைபை, ,ஈரல்கள்,சீரணம் நடைபெறும் முறை , குருதி சுழற்சி , மூளையின் அமைப்பு மற்றும் சில விசயங்களையும் அறிந்து கொள்வோம், 
             இதை ஓரளவு தெரிந்து கொண்டால் தான் அடுத்து வரும் மருந்து -- செய் முறைகள் ஆகியவற்றை  பற்றி அறியும் பொழுது ஓரளவு நமக்கு புரியவரும். 

       உடற்கூறு - உடலியல் என்றால் என்ன ?

             உடற்கூறு : உடலியல் பஞ்ச பூதங்களினாலும் எழுவகை தாதுக்களினாலும் ஆக்கப்பட்டதும் , தொண்ணூற்று ஆறு தத்துவங்கட்கும் - பதினான்கு வித இயற்கை விரைவுகட்கும் உட்பட்டதுமான , நமது உடலின் உறுப்புகள் யாவும் அமைக்கப்பட்டுள்ள இடம் - அமைப்பு முதலியவற்றை இயம்புவது உடற்கூறு எனவும் , மேற்கண்ட உடலுறுப்புகள் யாவற்றின் பயன் -செயல் முறைகளை பகருவது உடலியல் எனவும் கூறப்படும்.

1 கருத்து: