உடலின் வேகங்களும் - அவற்றை அடக்குவதால் உண்டாகும் விளைவுகளும் - பகுதி - 3
உடலின் வேகங்களும் - அவற்றை அடக்குவதால் உண்டாகும் விளைவுகளும் - பகுதி - 3
ஈளை இருமலை அடக்கினால் -- கடும் இருமலும் , மூச்சுக் காற்றில் துர் நாற்றமும் , இருதய நோயும் காணும் .
இளைப்பை அடக்கினால் - மிக்க சூடுற்று நீர்மேகம் , மூர்ச்சை , குளிர் , மற்றும் தும்மலை அடக்குவதாலான பிணிகளும் பற்றும்.
சுவாசத்தை அடக்கினால் -- இருமல் , வயிற்று பொருமல் , சுவையின்மை , சூலை நோய் , சுரம் , வெட்டை முதலியன காணும் .,
தூக்கத்தை அடக்கினால் -- தலைக்கனம் , கண் சிவந்து பீலைக்கட்டுதல் , கண் எரிச்சல் , செவிட்டுத்தனம் , தெளிவற்ற சொல் . சோம்பல் இவை விளையும்
கண்ணீரை அடக்கினால் கண்நோய் , பினிசம் , தமர் வாயு , தலையில் புண் கண்டு அதில் வாயு கூடி குன்ம நோய் விளையும் .
வாந்தியை அடக்கினால் புழுக்கடியினாலான தடிப்புக்குட்டம் , தடிப்புகள் , நமைச்சல் , பாண்டு , இரைப்பு , கண்நோய் , பித்த விஷ பாகம் , சுரம் , இருமல் முதலியவை காணும் .
விந்து-வை அடக்கினால் சுரம் , நீர்க்கட்டு , கை , கால் நோவுதல் , விந்து கசிந்து துணி நனைதல் , வெள்ளை , மார்படைப்பு முதலியன விளையும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக