விஷக்கடி வைத்தியரின் திறமை என்ன ?
நச்சுயிர் கடியினாலும் , விஷ மருந்துகளை உட்கொள்வதாலும் உடலில் ஏற்படும் நச்சு தன்மையை , விஷ முறிவு மருந்துகளாலும் , மாந்திரீகத்தாலும் நீக்கி குணப்படுத்தும் முறைக்கு - விஷ வித்தை அல்லது சாங்கலி எனவும் -- இதில் தேர்ச்சி பெற்றவரை - விஷ வைத்தியர் அல்லது சாங்கலிகன் எனவும் கூறப்படும். பொதுவாக ஒரு விஷ வைத்தியருக்கு பலவித நஞ்சுகளின் குறி குணங்களும் - அவை இன்னதென கண்டறியும் திறனும் - அதனதற்குரிய சிகிச்சை மற்றும் மருந்து முறைகளும் தெரிந்து இருக்க வேண்டும் . சித்த முறையின் படி மருத்துவமும் மாந்திரீகமும் அறிந்திருப்பார் . மேலும் சிலருக்கு தனக்குரிய ஞான திருஷ்டியின் மூலம் நோயுற்றவனின் பெயர் - முகவரி நச்சுயிர் தீண்டிய நேரம் முதலிய தகவல்களை வைத்து அவனை இன்னது தான் தீண்டியுள்ளது என்று கண்டறிந்து , தனது இருப்பிடத்தில் இருந்தே , வெகு தொலைவில் உள்ள நோயாளியை நேரில் பார்க்காமலேயே குணப்படுத்திவிடும் சக்த்தியும் சிலருக்கு உண்டு. சிலருக்கு தனக்குரிய மனோசக்தியாலும் , காந்த சக்தியாலும் செயல்பட்டு நச்சு தன்மையை நீக்கி குணப்படுத்த முடியும் . பலரால் அறியப்படாத இம்முறைக்கு மூமியா என்று பெயர் . அருள்வாக்கு பெற்ற சிலரது பெயரை கூறி ஆணையிட்டாலே விஷம் மேலேறாது . பிறகு சிகிச்சைசெய்வதும் உண்டு . பொதுவாக மாந்திரீக முறையின் படி இரகசியமான மந்திர உச்சரிப்புகளினாலும்--உள் வெளி மருந்துகளினாலும் - ஆக இரு வழியிலும் நஞ்சுண்டோரை காக்கும் முறைகள் நமது மருத்துவத்தில் உள்ளன ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக