ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

நாடி பார்க்கும் முறை :-

  நாடித்  துடிப்பு எப்படி ஏற்படுகின்றது ?

                              நமது இருதயத்தின் இடது சடரம் குவியும் பொழுது இரத்தம் தள்ளப்பட்டு  கண்டரையின் மூலம் சகல நாளங்களுக்கும் பாய்வதால் நாளங்கள் விரியும் . மீண்டும் இடது சடரம் விரியும் பொழுது  குருதி இழுக்கப்படுவதால் நாளங்கள் சுருங்கும் . இவ்விதம் இருதயம் விரியவும் சுருங்கவும் இருப்பதால் இதனை சேர்ந்த நாடி நரம்புகளும் விரிந்து சுருங்கும் தன்மை உடையதாக இயங்கி , இருதய நடையின் மாறுதல்களை தெரிவிக்கின்றது . இருதயத்தின் நிலையும் உடல் நிலைக்கேற்ப மாறுபாடு அடைவதால் அவற்றை நாம் நாடித்துடிப்பின் மூலம் அறிய முடிகின்றது . 

                            நாடித்துடிப்பினை  தசநாடி இருப்பிடங்களிலும் உணரலாம் எனினும் , கைகளில் அறிவதே நலமாகும் . எனவே ஆண்களுக்கு வலது கரத்திலும் , பெண்களுக்கு இடது கரத்திலுமாக -- முன் கையின்  ஆரை எலும்பின் மேற்புறமுள்ள  பெரு நாடியை   - மணிக்கட்டிற்கு கீழே ஒரு அங்குலம் தள்ளி  முவ்விரலால் மாறி மாறி மெதுவாக அழுத்தியும் தளர்த்தியும் பார்க்க வேண்டும் . அவ்வமயம் நமது ஆள்காட்டி விரலில் உணர்வது வாதம் எனவும் , நடு விரலில் உணர்வது பித்தம் எனவும் , மோதிர  விரலிளுனர்வது சிலேத்துமம் எனவும் அறியவும் . மற்றும் பூத நாடி பெரு விரல் - சிறு விரலிலும் குரு நாடி ஐந்து விரல்களிலும் சேர்ந்தும்  நிற்கும்.   இதில் நாடியின் எண்ணிக்கை, நடை, அழுத்தம், தன்மை,எழுச்சியின் அளவு இவற்றை அறிய வேண்டும் 


 

1 கருத்து:

  1. உங்கள் கருத்தூக்களுக்கு நன்றிகள்.
    நாடியின் செயற்பாடுகளை வைத்து எவ்வாறு நோய்களை இனங்கானுவது? நாடியின் தன்மைகள் பற்றி கூறுவீர்களானால் மிகவும் நன்றியுடையவர்களாக இருப்போம்.

    பதிலளிநீக்கு