சித்தர்கள் லிங்க பூசையின் தத்துவம்:-

1. பெண்லிங்கம் :- இது இருபாலரின் குறியும் இணைந்துள்ளதால் இது பொது வழிபாட்டுக்குரியது . இது முதல் நிலையாகிய சரியை க்கும் உடையது .
2. பூலிங்கம் :- இது ஆண் லிங்கமாகும் . இது உண்மை , சக்தியை கண்டறிய உதவும் லிங்கமாகும். இது இரண்டாவது நிலையான கிரியையின் தொடக்கத்திற்கு உரியது
3. நபும்சக லிங்கம் :- இது இரண்டிலும் சேராதது . இருண்ட நாடு நிலையான , மற்றும் கிரியை வெற்றி பெறும் நிலையில் உள்ள வழிபாடாகும் .
4. பரம லிங்கம் :- இதுமிக உயர்ந்த அல்லது மறைப்பு லிங்கமாகும் . இது மூன்றாம் நிலையான யோக வழிபாட்டிற்குரியது .
5. மகா லிங்கம் :- இது அறிவு ஒளியானது . இது பிறப்பை மறுத்து பரம்பொருளை அடைவதற்கு உரிய நான்காம் நிலையான ஞான வழிபாட்டிற்குரியது .
இவ்வகை லிங்கங்களையும் , பஞ்ச பூதங்களின் அடிப்படையில் பிரித்து பிருத்விலிங்கம் காஞ்சிபுரத்திலும் , அப்பு லிங்கம் - சம்புகேச்வரம் , திருவானைக்காவலிலும் , தேயு லிங்கம் - திருவண்ணாமலையிலும் , வாயு லிங்கம் - காளத்தியிலும் , ஆகாய லிங்கம் - சிதம்பரத்திலும் நிர்மாணிக்க பட்டுள்ளது .
இவ்வகை வழிபாடு யாவுமே சிவ-சக்தியின் வலிமையை உலகத்திற்கு உணர்த்துவதற்கும் , மேல் நிலையை அடைய வழிகாட்டுவதற்கும் வகுக்கபட்டவையே தவிர வேறில்லை . விநாயகர் வடிவ அமைப்பிலும் , ஓம் என்ற எழுத்தின் வடிவிலும் உள்ள சூக்குமம் இதுவன்றி வேறொன்றுமில்லை .
Interesing information. Thanks. Can you give pictures of each type of Linga as well?
பதிலளிநீக்குDisgusting!
பதிலளிநீக்கு