 |
அருகம்புல் |
அருகம்புல்லை ஒன்றிரண்டாக நசுக்கி ஒரு கைப்பிடி எடுத்து பத்து மிளகாய் சேர்த்து நான்கு தம்ளர் நீரை ஊற்றி ஒரு தம்ளராக வற்ற வைத்து வடித்து இளம் சூட்டில் பனங் கல்கண்டு சேர்த்து தினம் இரு வேளை பருகி வர இரத்தம் சுத்தமாகும் . உடல் அரிப்பு வேர்வை நாத்தம் வெள்ளை ஆகியவை தீரும் .
தங்களது வலைபதிவு நன்றாக இருக்கிறது, மக்களின் நலன் கருதி நீங்கள் எடுத்திருக்கும் இம்முயற்சி மாபெரும் வெற்றியடைய வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். இந்த பதிவில், //பத்து மிளகாய் சேர்த்து // என்று கொடுத்துள்ளீர்கள், மிளகு சேர்த்து என்பதைத்தான் இவ்வாறு சொல்லியுலீர்களா என்று தெளிவுபடுத்தவும். மேலும், அருகம் புல்லின் கணுக்கள் விஷத் தன்மை கொண்டது என்றும், அதனைச் சேர்த்து இடித்து சாறு பிளிவதோ, உட்கொள்வதோ அருகம் புல்லின் மருத்துவ குணங்களை முறித்துவிடும் என்றும் சொல்கிறார்கள், இது எந்த அளவுக்கு உண்மை என்பதையும் தெரியப் படுத்தவும், நன்றி.
பதிலளிநீக்குதாங்கள் கூறியது முற்றிலும் சரியே . மிளகு என்பதற்கு பதில் மிளகாய் என்று தவறாக வந்து விட்டது, மேலும் கணுக்களில் விஷத்தன்மைத்தன்மை கிடையாது, பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. அதாவது கனுவையும் சேர்த்து போட்டால் மருந்தின் வீரியம் சிறிதளவு குறையுமே தவிர வேறெந்த தீங்கும் ஏற்படாது , மிளகில் கூட மேல் இருக்கும் பூ போன்றதை எடுத்து விட வேண்டும் , ஏனெனில் அதுவும் வீரியத்தை குறைத்து விடும். இதற்கு சுத்தகரிப்பு என்று சொல்வார்கள் சித்த மருத்துவத்தில். தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி.
பதிலளிநீக்கு