சனி, 14 ஜனவரி, 2012

சித்தர்களும் --- கருவமைப்பும்

1. பரப்பிரம்மம் என்றால் என்ன ?
                      
                உலகின் பொருள் யாவும் நான்முகன் - விட்டுணு - உருத்திரன் ஆகிய மூன்று சக்திகளான படைத்தல் - காத்தல் - அழித்தல்  ஆகியவற்றால் முறையே மீண்டும் மீண்டும் தோன்றி  - நிலைத்து - அழிந்து வருகையில் , இவை ஓரிடத்தில் ஒடுங்குவதே பரப்பிரம்மம்    எனப்படும் ..
                   
                   அதாவது முறையே பரபரத்தில் - பரமும் , பரதத்தில் - சிவமும் , சிவத்தில் - சக்தியும் , சக்தியில் - நாதமும்  , நாதத்தில் - விந்துவும் , விந்துவில் - சதாசிவமும் , சதசிவத்தில் - மகேஸ்வரமும் , மகேஷ்வரத்தில் - உருத்திரனும் , உருத்திரனில் - விஷ்ணுவும் , விஷ்ணுவில் - பிரம்மனும் , பிரம்மனில் - ஆகாயமும் , ஆகாயத்தில் - வாயுவும் , வாயுவில் - அக்னியும் , அக்னியில் - நீரும் , நீரில் - மண்ணும் , மண்ணில் - அன்னமும் , அன்னத்தின் கண் - நர , மிருக, பட்சி , தாவர ,சங்கமாதிகளும் தோன்றியன   என்றும் , இதில் கடைசியாக கூறப்பட்டன அழியும் போது, முறையே ( தலைகிழாக) ஒன்றிலொன்றை அடைத்து முடிவில் பரா பரமாகிய பரமேஸ்வரன் இடத்தில்  ஒடுங்கும் எனவும்   கூறப்படும்..........   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக