அமுதத்தாரனை என்றால் என்ன ?
அமுதத்தாரனை என்பது ஒரு வித யோக நிலை ஆகும். அதாவது சித்த யோகிகள் உணவின்றி சமாதி நிலையில் நெடுநாள் இருப்பதெற்கென தங்கள் நாக்கை உள்நாக்குத் தண்டில் படுமாறு மடித்து , சுவாச குழலுக்கு போகும் இடைவெளியை தடுத்து சித்தாசனத்தில் அமர்ந்து , கண்டம் - கபாலம் - நெற்றி - இவற்றில் சிந்தையை ஒருமுகப்படுத்தி, புருவ நடுவை நோக்கி தவமியற்றுவதால் நாபி முதல் நாசி வரை யோகாக்கினி சுவாலை உண்டாகி , அதனால் தலையில் மூளை பகுதியாகிய ஆக்கினையின் பகுதியிலுள்ள பிரமரந்திரக் கோள்கள் தாக்குண்டு , அவற்றினின்று அமுதம் ஊறி உண்ணாக்கு வழியாக பாய்ந்து கண்டத்தின் மூலப் பொறியில் விளையும் அமுதத்துடன் கலந்து சொட்டு சொட்டாய் விழுந்துகொண்டே இருக்கும். இதனை அருந்துவதால் தபசிகள் தாகம் , பசி , சோர்வு முதலியவற்றில் இருந்து விடுபட்டு யோகத்தை எவ்வித இடையூறுமின்றி தொடருவதுடன் , பல்லாண்டு காலம் உயிர்நிலைப்பெற்று தவமியற்றி சித்திநிலை பெறுவதற்கும் வழி கிடைக்கிறது. சுழிமுனைக் கோளத்திலிருந்து ஊறி கசியக்கூடிய நீர்சத்து தான் மேற்கூறிய " அமிர்தம்" எனப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக