ஏகாந்த நிலையினால் ஏற்படும் பயன் என்ன ?
உலகத்தினர் தொடர்பையும் பந்த பாசங்களையும் உதறித் தள்ளி தனியிடம் சென்று மனதையும் செயலையும் நல்வழிப்படுத்தி ஒருமையுனர்வால் ஆத்மானந்தம் அடைய முயலுவதே சித்தர்கள் கூறிய ஏகாந்த நிலை என்பதாகும் ..
இந்த ஏகாந்த நிலையினால் பண்பும் செயலும் சீராக்கப்பட்டு , நல்லொழுக்கமும் பக்தியும் கைகூடி மனம் பரிசுத்தம் அடைந்து சிந்தனை மிகுந்து மற்றவர் அறிவிற்கு புலப்படாத எண்ணங்களும் சக்தியும் உதித்து கடவுளிடத்தும் , தேவர்களிடத்தும் தொடர்பு உண்டாகும் ..
பொதுவாக இந்த ஏகாந்த நிலையினால் அறிவை மூடிய அஞ்ஞானம் விலகும். மதியை கவரும் இருள் நீங்கி ஞானம் உண்டாகும் . ஆன்மாவை பற்றிய கட்டுப்பட்ட வினை எளிதாகும். கவலை அறவே நீங்கி சிந்தனை மேலிட காணாத காட்சி எல்லாம் புலப்படும். ஐம்புலக் கதவு அடைபட்டு ஆன்மா விடுபடும் . தனித்திருப்பதினால் சிற்றின்பத்தை மறந்து பேரின்பம் அடைதல் - வியாகூலத்தை அறவே ஒழித்து மனோ சாந்தி அடைதல் ..ஆயுள் கூடி நீடித்து வாழல் முதலியன கிட்டும்..
( ஏகாந்த நிலை கொள்ள காடிற்குதான் செல்ல வேண்டும் என்பதில்லை , நாட்டிலும் கிராமப்புறங்களிலும் கூட தனியிடம் அமைத்து கொள்ளலாம் )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக