மெய் பொய் கர்ப்பம் அறிவது எவ்வாறு ?
மெய் பொய் கர்ப்பக் குறியாவது , உண்மையிலேயே கருவுற்ற பெண்ணின் உடல் பூரித்து , நாடி படபடத்து , கண்கள் நீல நிறமுறும். முலைகள் பருத்து , காம்புகள் கருத்து , முடிச்சுகளுடன் காணும். வாய்நீருரல் , மயக்கம் , காலையில் வாந்தி காணும். வயறு படிப்படியாய் பெருகும். மூன்றாம் மாதத்திற்கு முன் வயிற்றில் பிண்டம் அசைவது தெரியாது. விரலினால் அடிவயிற்றை அழுத்தினால் கல் போலிருப்பதுடன் , விரலை எடுத்ததும் பழைய நிலையை மெதுவாகவே அடையும்.
ஆயின் - வயற்றில் சூதக கட்டி இருப்பின் ஆரம்பத்திலேயே வயறு பெருத்துவிடும். முதல் மாதத்திலேயே வயற்றில் சிசு புரள்வது போல் தோன்றும். விரலினால் அடிவயிற்றை அழுத்தினால் அழுத்தி எடுத்த உடனேயே பள்ளம் மறைந்து விடும். இவ்வாறன விடயங்கள் மூலம் மெய் - பொய் கர்ப்பம் குறித்து அறிய முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக