வியாழன், 19 ஜனவரி, 2012

ஆண் பெண் தோன்றும் விதமும் -கண்டறியும் முறையும்

ஆண் பெண் தோன்றும் விதமும் -கண்டறியும் முறையும் ...........

                              உடலுறவின்   போது விந்து வெளிப்படும் சமயம் சரம் ( வாயு ) பிங்கலையில் இயங்க அது ஆண் மகவும் , இடங்களில் இயங்க பெண் மகவும் இரு வாயுவும் சமமாக ஓடினால் , பேடியும் உருப்பெறும் ...
                              உடலுறவில் ஆணுக்கு பெண் மீது அதிக அன்புண்டாகில் ஆணும் , பெண்ணுக்கு ஆண் மீது அதிக அன்புண்டாகில் பெண்ணும் , இரண்டும் சமமாகில் அலியும் பிறக்கும். 
                              நாத விந்து சேர்க்கையில் நாதம் கூடினால் பெண்ணும் , விந்து கூடினால் ( அதிகமானால் ) இரண்டும் கூடினால் இரட்டை பிள்ளையும் பிறக்கும் எனவும் கூறப்படும்.

சிசு ஆணா ? பெண்ணா ? என கண்டறியும் முறை 

                             கர்ப்பிணிக்கு மிதமான  பசி  , வலது  முலை அதிகம் விம்மல் , முலைக்காம்பை நசுக்க கலங்கிய வெண்ணிறப் பொருள்  வெளிப்படல் , பலநிற சிறுநீர் , சிசு வலப்புரமிருப்பது  போல்   தோன்றல் , அமருதல் , எழுதல் , வேலை செய்தலின் போது வலது கையையே ஊன்றுதல் , வலப்புறம் படுத்தல் ஆகிய குறிகளிருப்பின் வயிற்றிலிருப்பது ஆண் சிசு எனவும் ,         
                             மிக்க சோம்பல் , இடது  முலை அதிகம் விம்மல் , அற்ப உணவில் அவா , கள்ளபசி , முக ஒளிக் குன்றல் , அமருதல் - எழுதல் - வேலை செய்தலின் போது இடது  கையையே ஊன்றுதல் , இடப்புறம் படுத்தல் ஆகிய குறிகளிருப்பின் வயிற்றிலிருப்பது பெண்  சிசு எனவும் அறியலாம் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக