கிரக தோடம் (தோஷம்) பிடிப்பது ஏன்?

ஒருவனது மனம் - மெய் - செயல் ஆகியன தவறாக செல்லுகையில் அவன் தலையெழுத்து - ஊழ்வினை படியும் - கிரகங்களின் புனிதத்தன்மையை பாதுகாக்கும் பொருட்டும் - கிரகங்களின் சார்பாக அலைந்து திரியும் துர் தேவதைகள் தனது வலிமையினால் அவனுக்கு அளிக்கும் கொடிய தீய தண்டனைகளே கிரக தோடமாகும் . இங்ஙனமே பெரிய அளவிலான மதச்சடங்கு , திருவிழாக்களில் கூட கிரகங்களுக்குரிய வழிபாட்டினை ஒட்டு மொத்தமாகவும் மிகச்சிறிய அளவில் செய்வதோடன்றி , மற்ற சமயங்களில் அதை வணங்குவதேயில்லை . இதனால் சினமுறும் கிரகங்கள் அத்தகையோருக்கு தன்பால் கவனமும் , வணக்கமும் ஏற்படுத்த வேண்டியும் மேற்கூறியவாறு கோளாறுகளை ஏற்படுத்தி அதனால் தனக்குரிய சிறப்பு வழிபாட்டினை பெற்று கொள்வதுண்டு . இதனால் தீமை மற்றும் பிணிகளிலிருந்து தன்னை காத்துக்கொள்ள கிரக சாந்தி செய்வது மனித இயல்பாகும். இத்தகைய செயல்பாடுகளுக்கு நம்மை உட்படுத்துவதே கிரக தோடத்தின் வலிமையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக