தூக்கத்தினாலான பயன்கள் என்ன ?
உலகமெங்கும் நிறைந்துள்ள சக்தியை பற்றிய மாயையின் வலிமையினால் ஏற்பட்டு - மனதில் செயலற்று , மெய்மறந்து இறந்தவனைப்போல் தற்காலிகமாக கிடக்க செய்யும் ஓர் நிலைமையே நித்திரை எனப்படும் தூக்கம் ஆகும் . இருதயம் தாமச குணத்தின் மயக்கத்தால் மூழ்கபடும்போது தான் தூக்கம் வரும். மாய சக்தியினால் ஈடுபடாதவர்களுக்கு தூக்கமே கிடையாது. மற்றவர்களுக்கு உடல் நலம் ஏற்படும். நித்திரையின் போது இச்சையும் , உணர்வும் முழுமையாகவோ , பகுதியாகவோ செயலற்று போவதால் உடலிற்கும் மனத்திற்கும் ஒய்வு கிடைக்கிறது. விழித்திருக்கும் சமயத்தை விட சுவாசமும் நாடி நடையும் குறைவாகவும் , அமைதியாகவும் இயங்கும். கண்மணியும் சுரப்பியும் ஓய்வடைகிறது. சில உள்ளுறுப்புகளைத் தவிர மற்ற உறுப்புகள் மற்றவை தானாகவே கிட்டும் ஓய்வினால் அமைதியடைகிறது. இதனால் புத்துணர்ச்சியும் அமைதியும் கூடும். அளவான இராத்தூக்கம் அனைவருக்கும் பயனளிப்பதாகும். .மெய்மறந்த ஆழ்ந்த தூக்கத்தில் புலன்கள் செயலற்று மனதை அடைவதாகவும் கனவு , வலி முதலிய தொல்லை இன்றி ஆன்மா உடலை விட்டு வெளியேறி பிறகு வந்து உட்புகும் எனவும் கருதப்படும். இது உயிர்ப்பில் ஒரு அமைதியான நிலையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக