மூவகை உடலும் - மருத்துவமும் யாவை ?
உடல்கள் தூல - சூக்கும - காரண உடல் - என மூன்று வகைப்படும்.,
தூல உடல் என்பது ஏழு தாதுக்களினால் ஆன பிண்ட தத்துவ நிலையிலுள்ளதாகும். இதற்கு இதற்கு சுரம் , நீர்க்கோவை , வலி , கடுப்பு , சிரங்கு , அடி , வெட்டு , குத்துகாயம் வெட்ப தட்ப மாறுதலினாலான கேடு , பசி , தாகம் ஆகிய உடற்பிணிகள் காணும் . இதற்கு தாவர சரக்குகளினாலான சூரணம் , மாத்திரை , லேகியம் , தைலம் , குடிநீர் , மணப்பாகு , சுருக்கு முதலியவற்றால் அப்புவின் ( நீரின் ) துணைக் கொண்டு உடலில் கலக்க செய்து பிணிகளை நீக்க வேண்டும்.
சூட்சும உடல் என்பது தச வாயு - தச நாடியினாலான சாராசர தத்துவ நிலையிலுள்ளதாகும். இதற்கு சன்னி , சயம் , குட்டம் , நீரிழிவு , வாயு , குன்மம் , ஆகிய உயிர்ப்பிணிகள் காணும். இதற்கு ரச பாடான உலோகங்களினாலான பற்பம் , செந்தூரம் , சுண்ணம் முதலியவற்றால் தேயுவின் (நெருப்புவின்) துணை கொண்டு , வாயு நாடிகளை சம்பந்தபடுத்தி பெரு நாடி நரம்பு மூலம் உடலில் பரப்பி பிணிகளை நீக்க வேண்டும்.
காரண உடல் என்பது பஞ்சபூதங்களினால் ஆன ஆண்ட தத்துவ நிலையிலுள்ளதாகும் . இதற்கு நரை , திரை , மூப்பு , சாக்காடு , பயம் ஆகிய பிறவி நோய்கள் காணும். இதற்கு சித்துவின் தன்மையினாலான இரசகற்பம் , மூலிகை கற்பம் , முதலியவற்றால் நரை , திரை , மூப்பை நீக்கியும் ஆசனத்தினால் பிராண வாயுவின் துணை கொண்டு பயம் சாக்காடு இவற்றை வெல்லவும் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக