சிரஞ்சீவியம் என்றால் என்ன ?

நாம் உயிர் வாழ துணை புரியும் உயிர்க்காற்றின்
இடகலை - பிங்கலை சுவாசம் சமனாகுமாறு செய்தலால் நீண்ட ஆயுளை அடைவதே
சிரஞ்சீவியம் எனப்படும். இது
பிராணாயாமப் பயிற்சியினால் மட்டுமே கைக்கூடும். நாம் உள்ளிழுக்கும் மூச்சுக் காற்றின் அளவை விட வெளியிடும் மூச்சுக் காற்றின் அளவு கூடுதலாகும். அதாவது நாம் ஒவ்வொரு முறை மூச்சு விடும் போதும்
16 அங்குல நீளத்திற்கு மாற்றி வெளியேற்றிவிட்டு ,
12 அங்குல நீளத்திற்கு மட்டுமே உள்ளிழுப்பதால்
4 அங்குல நீள அளவுள்ள காற்று நஷ்டப்படுவதால் ஆயுள் பாகமும் குறைகிறது. இதனை சுவாசப் பயிற்சியின் மூலம் மாற்றியமைத்து உள்ளிழுப்பதும் - வெளி விடுவதுமான காற்றின் அளவை
16 அங்குலமாக மட்டும் வைத்துக்கொண்டால் பிராண வாயுவின் நட்டமின்மையால் ஆயுளும் நீடிக்கும். யோகிகள் சுவாசத்தை படிப்படியாக குறைத்து முடிவில் முற்றாக வெளியேறாதபடி செய்து தன்னுள்ளேயே மட்டும் இயங்க செய்து , சமாதி நிலையுற்று அழியாத உடலை பெறுவார்கள்.
இதனை குறிக்கவே பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்ற முதுமொழியும் , என்றும் பதினாறு ( வயது) உடையதாக கூறப்படும் மார்கண்டேயன் போன்ற பாத்திரப்படைப்பும் உண்டானது . இவ்விரண்டின் உண்மைப்பொருளும் மூச்சுப்பயிற்சியே தவிர வேறொன்றும் இல்லை..
oo very nice
பதிலளிநீக்கு@kaanal
பதிலளிநீக்குthank u kaanal
அன்புள்ள அய்யா
பதிலளிநீக்குவிளக்கங்கள் அருமை
சிரத்தில் சீவிபவன் சிரஞ்சீவி
நன்றி
சீனிவாசன்
ssetex@gmail.com