புதன், 18 ஜனவரி, 2012

கரு எப்படி உருவாகிறது

கரு எப்படி உருவாகிறது ?
              பெண்ணின் மாதவிடாய் கண்ட 16  நாட்களுள்  நாதசயத்திநின்று ஓரிரு நாதக்குமிழ்கள் முற்றி வெடித்து வெளிப்பட்டு , கருக்குழியில் விழுந்திருக்கும் சமயம் ஆணுடன் உடலுறவு கொள்கையில் தீயும் வாயுவும் கூடிய விந்து பாய்ந்து நாதத்துடன் கலந்து உறவாகி திரண்டு தன் வடிவாகி   தமர் போன்ற இதழ்களின் வாயிலை மூடும். 

               அவ்வமயம் அபானவாயு வெளியில் நின்று வாயிலைக்காக்க , உட்சென்ற பிராண வாயு கருவை பல பிரிவுகளாக்க , உதான வாயு கருவை வளர்த்து வரும். எனவே பரமாணுக்களை ஒத்த நாத விந்து சேர்க்கையின் போதே படைத்தல் - காத்தல் - வளர்த்தல் ஆகிய தொழில் புரியும் வாதம் - பித்தம் - கபம் - ஆகிய முத்தோடமும் விளைவதை அறியலாம் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக