ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

சடராக்கினி - ஒரு விளக்கம்

சடராக்கினி என்றால் என்ன ? 
        
        வயிற்றை - சடரம் எனவும் , அக்னியை நெருப்பு எனவும்  கூறப்படுவதால் சடராக்கினி என்பதற்கு வயிற்றின் நெருப்பு எனவும் மற்றும் , சடரச்சுவாலை , உதராக்கினி , மூலாக்கினி , ஆமயாக்கினி எனவும் கூறப்படும்.இது உண்ட உணவை உதரக் கோல நீரின் உதவியோடு   இரசாயன மாற்றத்திற்கு உட்படுத்தி கடுரசமாய் மாற்றுவதற்காக வயிறு , குடல் ஆகியவற்றில் அடங்கியுள்ள தீயின் சக்தியாகும். இதுவே உடல் வலிமைக்கும் ஆயுளுக்கும் காரணமாகும். இது தனது இயக்க தன்மைக்கேற்ப நால் வகையாக கூறப்படும்.

௧.    கடும் செரிமானத்திற்கு தயாராகும் வண்ணம் தீயின் சுவாலைப்போல் சூக்குமமான வீரியமிக்க பசியை உண்டுபண்ணக்கூடிய தீபாக்கினி 

௨. முதலாவதை விட கடுமை குறைந்ததும் சாதாரண செரிமானத்திற்கேற்ப சக்தி குறைந்தும் நடுநிலை வெப்பத்தை உடையதுமானது சமாக்கினி 

௩. செரிப்பு சக்தி குறைவினால் பசி குறைந்த நிலையில் ஏற்படும் தேவைக்கேற்ப - மெதுவான அல்லது சோர்வான வெப்பத்தை உடைய மந்தாக்கினி 

௪. செரிமான கோளாறு காரணமாக முறையற்ற பசி அல்லது பசியற்ற நிலையில் ஏற்படும் நச்சு தீயை  உடையதுமான  விசமாக்கினி  என்பனவாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக