புதன், 8 பிப்ரவரி, 2012

மூளையின் அமைப்பு

மூளையின் அமைப்பு 

                             தலை ஓட்டினுள்ளிருக்கும் - அறைகள் மிகுந்த குழைவான உறுப்பாகிய மூளை வெண்ணிறமாகவும் , அதன் வெளிப்படை நரை நிறமுடனும் , நெற்றிக்கு நேரே பிடரி வரை வலமிடமாய் இரு சமபங்காக பிரிக்கப்பட்டுள்ளது. மூளையில் அரைக்கால் பங்கு அளவு   தலையின் கீழ் பிடரியை பற்றி பந்து வடிவில் உள்ளது - துணை மூளை எனப்படும். இதில் வெண்ணிறப்பகுதி குறைந்து நரை நிறப்பகுதி மிகுந்திருக்கும். இவ்விரண்டில் நரை நிறப்பகுதி வெண்ணிறப்பகுதிக்கு ஊடாக மரம் கொம்பு விட்டு படர்ந்தது போல் தோன்றும். மூளையை சுற்றியுள்ள வெளிச்சவ்வு தடித்து வலிமை குறைந்தும் - இடைசவ்வு மெல்லியதாய் ஒளியுடனும் உட்சவ்வு மிக நுண்ணிய குருதி குழல்களால்  பின்னப்பட்ட வலையை ஒத்து இருக்கும். மூளையும் நரம்புக்கூட்டங்களும் இணைந்து உடலின் சகல இயக்கங்களுக்கும் துணையாய் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக