கோளங்கள் என்றால் என்ன ?
உடலின் பாதுகாப்பிற்கும் , வளர்ச்சிக்கும் தேவைப்படும் முக்கிய பொருட்களான சுரப்பிகளை தயாரித்து அளிக்கவும் - கழிப்பதற்கும் : குருதியிலுள்ள திரவப் பொருட்களை கவரவும் - கழிக்கவும் , இரத்தத்தில் உள்ள மாசுக்களை வடிக்கவும் வேறு தொழில்களை இயற்றவும் வலிமையுடன் திகழ்வதே கோளங்கள் எனப்படும். இவை நுண்ணிய நாடிகள் , நாளங்கள் , விசர்க்க குழல்களால் திரளப்பட்டும் பயறு முதல் -- பனங்காய் அளவிலும் இருக்கும். எடுத்துகாட்டாக ஈரல் . மண்ணீரல் , முலை , பிருக்கம் , மாசயனி , உமிழ்நீர் கோளங்களை கூறலாம்.
சுரப்பிக்கும் தொழிலோடன்றி உடலுக்கு தேவையற்ற பொருட்களை சோஷணக் குழல்களால் உறிஞ்சி , அவற்றின் மூலம் குருதியில் சேர்த்து , கோளங்கள் வழியாக அந்தந்த விசர்கமாய் கழித்து விடுவதுமுண்டு . இவற்றுள் மாசயனி , - சுவேதா - நின -குழல் - குழலற்ற - தேவதாரு - சுழுமுனை - விசுத்தி - கெடைய - ஆசன - உமிழ்நீர் - கன்ன - தந்த - கண்ட - குடல் - கழிவு - சிறு - பாசக நீர் - சினை - மயிர்க்கால் - கண்ணீர் - முலை - பருவபக்குவ - திராக்ஷை குலை -பிரிவினை - குறி - யோனி - கருப்பை - கோளங்கள் என பல வகையுண்டு .
இவற்றின் சுரப்பிகள் வெளியேறாவிடினும் மாசுக்கள் தடை படினும் பிணிகள் பற்ற வழிபிறக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக