வியாழன், 9 பிப்ரவரி, 2012

ஒன்று முதல் ஆறறிவு

ஒன்று முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தவும். 

                       பூவுலகில் அசையும் அசையா பொருட்கள் யாவும் உயர்திணை - அஃறினை என இரு பிரிவினுள் அடங்கும். இவற்றுள்

1 . தாவர இனம் யாவும்  உடலை மட்டும் கொண்டு தொட்டதும் உணரக்கூடிய வாயுவின் அம்சமான ஓரறிவு மட்டும் கொண்டவையாகும். 

2 . நத்தை , முரள், கிளிஞ்சல் , முதலியன உடலும் - நாவும் கொண்டு - உணரவும் - சுவைக்கவும் கூடிய வாயு - நீர் அம்சமான ஈரறிவு மட்டுமே கொண்டவையாகும்.

3 .  கரையான் - ஈசல் முதலியன உடல் - நாக்கு - மூக்கு கொண்டு , உணர - சுவைக்க - நுகரக்கூடிய வாயு - நீர் - மண் அம்சமான மூன்றறிவு  மட்டும் கொண்டவையாகும் .

4. நண்டு , தும்பி  முதலியன உடல் - நாவு - மூக்கு - கண் கொண்டு - உணர , சுவைக்க , நுகர , பார்க்ககூடிய - வாயு - நீர் - மண் - தீ அம்சமான் நான்கறிவு மட்டும் கொண்டவையாகும்.

5 . மிருகம் , பறவை இனம் யாவும்  உடல் - நாக்கு  - மூக்கு - கண் - செவி கொண்டு உணர , சுவைக்க , நுகர , பார்க்க , கேட்க கூடிய   வாயு - நீர் - மண் - தீ- ஆகாயம் ஆகியவற்றின் அம்சமான ஐந்தறிவு மட்டும் கொண்டவையாகும்.

6 . மனித இனம் யாவும் மேற்கூறிய ஐந்தறிவுடன்  அஃறினை பொருட்களுக்கு இல்லாத பகுத்தறிந்து - சிந்தித்து பேசக்கூடியதான ஆறாவது அறிவையும் பெற்று ஆறறிவுடன் திகழ்பவர்களாகும் . ஆக உயிர்கள் அனைத்திலும் மிக மேலான சிறப்புடன் திகழுபவர் மனிதன் மட்டுமே ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக