செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

குடிநீர் ( கியாழம் )

குடிநீர் ( கியாழம் ) என்றால் என்ன அவற்றின்  சில பிரிவுகள்
     
                  மருந்து சரக்குகளை சிதைத்து அதனதற்கு கூறியுள்ள அளவு தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்துக் கொள்வதே குடி நீர் ( கியாழம் ) எனப்படும்.

                       இதை கியாழம் , கஷாயம் , குடிநீர் எனவும் கூறுவர்.  இது பலவகைப்படும். அவற்றுள் சில,

 1 . பாண்டம் - ( வெந்நீர் கியாழம் ) இது ஒரு பங்கு மூலிகை சூரணத்தை 8  பங்கு சுடு நீரில் இரவு முழுவதும் அல்லது பன்னிரண்டு மணி நேரம் ஊறவிட்டு பின்  குடிப்பதாகும்.

2 . சீதக்கியாழம்:- இது ஒரு பங்கு சரக்கை ஆறு பங்கு குளிர்ந்த நீரில் இரவில் ஊறவிட்டு காலையில் வடித்து குடிப்பதாகும்.


3 . பாணியம் ( இலகு கியாழம் ) :- இது ஒரு பங்கு சரக்கை 32  பங்கு நீரில் கொதிப்பித்து பாதியளவாக சுண்டியபின் வடிப்பதாகும் . இது தேவைக்கேற்ப மருந்தாகவும் , தாகம் தனிப்பதற்காகவும் பயன்படும்.


4 . பிரமத்தியை :- இது மூலிகை அல்லது கடை சரக்குகளை நசுக்கி கடைந்து அல்லது இடித்து பொடித்து அதற்கு எட்டு மடங்கு நீர் விட்டு , கால் பாகமாக அதாவது இரண்டு பங்காக சுண்டவிட்டு வடிப்பதாகும் . இது தேன் கலந்து பருகுவாதாகும்.

5 . சீரபாகம் :- இது ஒரு பங்கு சரக்கை எட்டு  பங்கு பால் - 32 மடங்கு தண்ணீர் இவற்றுடன் கலந்து காய்ச்சி அதிலுள்ள நீர் முழுவதும் வற்றியவுடன் , பால் மட்டும் நிற்கும் சமயம் வடித்து எடுப்பதாகும்.

1 கருத்து: