சூரணத்திற்குரிய சுத்தி முறை என்ன ?
மருந்து அல்லது மூலிகை பொருட்களை முறைப்படி பறித்தோ அல்லது சுத்தம் செய்தோ நிழலில் உலர்த்தி அல்லது பொடித்து சலித்து கலந்து கொள்வதே சூரணம் எனப்படும்.
இந்த சூரணத்தை சுத்தி செய்வதற்கு சிறிது பசுவின் பால் விட்டு பிசையவும் . ஒரு மண் சட்டியில் பசுவின் பாலும் - நீரும் சமன் கலந்து ஊற்றி சட்டியின் வாயில் ஒரு தூய்மையான துணியை சிறிது பள்ளமாக இருக்குமாறு கட்டி அதில் பிசைந்த சூரணத்தை பிட்டு மாவு போல் வைத்து , அதன் மேல் ஒரு சட்டியை வைத்து மூடி சந்து வாயில் ஆவி போய் விடாதபடி துணி சுற்றி மூடி அடுப்பிலேற்றி பால் சுண்ட எரித்து எடுக்கவும். பின் அப்பிட்டை வெயிலி உலர்த்தி மீண்டும் இடித்து துணியில் சலித்து எடுத்துக்கொள்ளவும். இதுவே சூரணத்தை சுத்தி செய்யும் முறை ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக