வியாழன், 16 பிப்ரவரி, 2012

கிருதம் மற்றும் இலேகியம் தயாரிக்கும் முறை

கிருதம் மற்றும் இலேகியம் தயாரிக்கும் முறை 

                         கிருதம் தயாரித்தல் : -

                              குறிப்பிட்ட இலைகள் - கிழங்குகள் இவற்றின் சாரும் கற்கங்களும் கூட்டியோ அல்லது சரக்குகள் பச்சிலைகளின் குடிநீர்சாறு இவை கூட்டியோ ஒரு மண் சட்டியிலிட்டு இதன் அளவிற்கு இரண்டு பங்கு -- வடித்த பின் கல்கம் தேவை எனில் நான்கு பங்கு-- பசுவின் நெய் விட்டு   வெண்ணிற நுரை எழும்பி அடங்கும் வரை காய்ச்சி நெய் பதத்தில் வடித்தேடுப்பதே கிருதம் 
( நெய் ) ஆகும். 

                              இலேகியம் தயாரித்தல் :-

                               குடிநீர்கள் , சாறுகள் இவற்றை தனித்தோ , கலந்தோ பாண்டத்திலிட்டு உரிய அளவு சர்க்கரை கூட்டி அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து சாறு சுருங்கி ( பாகு நார் போன்ற பதத்தில் ) மணம் வரும் சமயம் , முன்பே சூரணித்துள்ள சரக்குத்தூளை அதில் சிறுக சிறுக தூவிக்கிண்டி , விடவேண்டிய நெய்யை முன்னரும் , தேனை பின்னரும் விட்டுக்கிளறி பக்குவத்தில் எடுத்துக்கொள்வதே இலேகியம் ஆகும்.  பொதுவாக சூரணத்திற்கு இரண்டு பங்கு சர்க்கரையும் இதில் அரை பங்கு நெய்யும் , இதில் அரை பங்கு தேனும் மற்றும் நீர் , பால் , குடிநீர் இவை தனித்தோ மொத்தமாகவோ சர்க்கரையின் அளவில் நான்கு பங்கும் சேர்த்தால் நலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக