அனுபானம் என்பதன் பயன் என்ன ?
பொதுவாக அனுபானம் என்பது துணை மருந்து என்று கூறப்படும். அதாவது ஒரு நோய்க்குரிய மருந்தை கொடுக்குகையில் அம்மருந்தின் வீரியத்தை கூட்டவோ , மிகு வேகத்தை குறைக்கவோ செய்வதற்கும் , பிணி நீங்குவதற்குரிய வாய்ப்புகளை மேலும் அதிகரிக்க செய்வதற்கும் - ஒரே மருந்தை பல்வேறு பிணிகளுக்கு பயன் பெற செய்வதற்கும். தலைமை மருந்துடன் சேரும் பொருளை துணை மருந்து அல்லது அனுபானம் எனவும் கூறப்படும்.
இதன் உதவியின்றி தனியாக கொடுக்கையில் , பெரிய மருந்துகளின் சக்தி கூட வீணாகிப்போவதுடன் பின் விளைவுகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளதால் அனுபானம் என்பது சில சமயம் தலைமை மருந்தை விட சிறந்ததெனக் கருதப்படும். உதாரணமாக பற்பம் , செந்தூரம் , சுண்ணம் முதலிய மருந்துகளை பால் , நெய் , தேன், குடிநீர் , சூரணம் , இளகம் , மூலிகை சாறு சருக்கரை முதலிய அனுபானத்தில் கொடுப்பதை கூறலாம் .
அனுபானம் என்பது மருந்துடன் சேர்த்தோ அல்லது மருந்து உண்பதற்கு முன்போ , பின்போ அல்லது சிகிச்சையின் போதுள்ள உணவு வகைகளின் போதோ பிணிகேற்றால் போல் தரப்படும். குறிப்பாக கூறினால் அனுபானம் என்பது ஒரு அரசன் நல்வழி செல்ல துணை நிற்கும் அமைச்சருக்கு ஒப்பானதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக