திங்கள், 20 பிப்ரவரி, 2012

புட பாகம்

புட பாகம் எத்தினை வகைப்படும் ? 

                   வரட்டியின் உதவியால் எரிக்கப்படும் எரிப்புத்திட்டமாகிய புடம் ஏழு வகைப்படும். அவையாவன :- 

1 . காடைப்புடம் ( 1  எரு )  

2 . கவுதாரிப்புடம் ( 3 எரு )

3 . குக்குடப்புடம் ( 10 எரு ) 

4 . வராகப்புடம் ( 50 எரு )

5 . மணல் மறைவுப்புடம் ( 90 எரு )

6 . கனப்புடம் ( 800  எரு )

7 . கெஜப்புடம் ( 1000 எரு )

ஆகியனவாகும் . இது இல்லாமல் பூமிப்புடம் , உமிப்புடம் - தானியப்புடம் - சூரியப்புடம் - சந்திரப்புடம் - அம்மாவசைப்புடம் -  பருவப்புடம் - பனிபுடம் - பட்டைப்புடம் ஆகியனவும் பயனில் உண்டு .

                 புடம் போட உதவும் எருவின் அளவு காட்டில் கிட்டும் இயற்கை வரட்டி - இரண்டு   பலம் எடையிலும் , நாமே தட்டி உலர்த்தும் வரட்டி செயற்கை வரட்டி 12 " x  1/2 "   அளவிலும் இருக்க வேண்டும் .பசு அல்லது ஆட்டின் சுத்தமான தனி சாணத்தினாலான வரட்டிகளே மருந்துக்கு தீங்கின்றி சக்தியூட்டுபவை ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக