செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

நெருப்பின் அளவும் மருந்தெரிக்கும் விறகும் :-

நெருப்பின் அளவும் மருந்தெரிக்கும் விறகும் :- 

                        மருந்துகளை செய்வதற்கு உரிய நெருப்பின் அளவு நான்கு வகைப்படும். இதில் விளக்கின் சுடரைப்போல் உள்ள தீக்கு  , தீபாக்கினி  ( ஒரு விறகு ) என்றும் , - மலர்ந்த தாமரைப்பூப்போல் உள்ள தீக்கு கமலாக்கினி ( இரண்டு விறகு ) என்றும் , வாழைப்பூ போல் உள்ள தீக்கு கதலியாக்கினி ( மூன்று விறகு ) என்றும் - இந்த அளவுக்கு மிகுதிப்பட்ட தீக்கு காடாக்கினி ( நான்கு விறகு ) என்றும் பெயராகும். 

                        இதில் விறகு என்பது இரு விரற்கடை அளவில் ஒரு சாண் நீளத்தில் உள்ளதாகும் என கருதுக. 

                        அடுப்பிலேற்றிய மருந்துகளை காய்ச்ச , வறுக்க , நீற்ற சில குறிப்பிட்ட வகை விறகுகளை , அதுவும் ஒரே சாதியாக  பயன்படுத்தப்பட வேண்டும்   என கூறப்பட்டுள்ளது . அவை புளி - சதுரக்கள்ளி - வெட்பாலை - வேங்கை - உதிரவேங்கை - வெள்வேல்   - காசா - ஆவாரை - வல்லாரை - வேம்பு முதலியனவாகும் . மற்றும் துளை - குடித்தைலங்களுக்கு - உசிலை , இலந்தை -- பிடித்தைலத்திற்கு -- புளி , இலுப்பை -- சுரம் முதலியவற்றிற்குரிய உயர்வகை தைலங்களுக்கு  - ஆவாரை - சிற்றாமுட்டி ஆகிய விறகு அல்லது அவ்வவற்றின் அடுப்பு கரிகளை பயன்படுத்தவேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக