கட்டுதல் - பொட்டணம் - புகை என்றால் என்ன ?
கட்டுதல் என்பது இலைகள் , பட்டைகள் , பறவைகள் இவற்றை நன்கு இடித்தோ - அரைத்தோ - வதக்கியோ - புளித்த நீர் இவற்றில் வேக வைத்தோ நோயுற்ற இடத்தில் இட்டு கட்டுவதாகும். . இவை தவிர பாடாணம் முதலியவற்றை கட்டுவதும் உண்டு . இவற்றிலொன்றை சன்னிக்கு - தலையிலும் , கண்நோய்க்கு கண்ணிலும் , கை கால் எரிவுக்கு உள்ளங்கை - உள்ளங்காலிலும் , கடுவனுக்கும் கால் வீக்கத்திற்கும் காலிலும் , விதை வீக்கத்திற்கு விதையிலும் , அரையாப்புக்கு அரையிலும் கட்டுவதாகும்.
பொட்டணம் என்பது சரக்குகளை பொடித்து துணித்துண்டால் பொட்டலமாக கட்டி சுடவைத்த எண்ணைகளில் நனைத்து நோயுற்ற இடத்தில் ஒத்தடம் இடுவதாகும். மேலும் பெண்களுக்கு பேறு காலத்தில் பெருங்காயத்தை முடிந்து காதிலும் , வாங்கு வாசல் தளர்ச்சிக்கு துவர்ப்பு பொடிகளை முடிந்து யோனியிலும் , மூக்கு நோயினருக்கு மூக்கிலும் , ஆசன நோயினருக்கு ஆசனத்திலும் மருந்து முடிச்சுகளை வைப்பதற்கு பொட்டணம் என்று பெயர் .
புகை என்பது மயிலிறகு , சீரகம் இவற்றை துணித்துண்டில் இட்டு திரி கொளுத்தியாவது - விலங்குகளின் குழம்பு சீவல், மாடு எருமை இவற்றின் கொம்பு சீவல் , நல்லபாம்பு சட்டை , பன்றி புட்டை இவற்றை நெருப்பிலிட்டாவது - அகத்தியர் குழம்பு - கௌசிகர் மை இவற்றை துணியில் தடவி திரித்து விளக்கெண்ணெயில் நனைத்து கொளுத்தியாவது புகை உண்டாக்குவதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக