கல்வம் என்பது கல்லினாலான ஆன முட்டை வடிவமான குழியுள்ள அம்மியாகும். இதில் பொடி , கற்கம் தவிர நீர்ப்பெருக்குள்ள பொருட்களையும் அரைக்கலாம் . இதில் நடைமுறையிலுள்ள கருப்பு கல்லினால் செய்யப்பட கலவம் மருந்துடன் கலவாதாகவே அதில் அரைத்த மருந்து நற்பயனைத் தரும் - சிவப்புக்கல் கலவம் சன்னி - பாத நோய்க்குரிய மருந்துகளை அரைத்தால் பலன் கிட்டும். வெள்ளைக்கல் மருந்தின் வேகத்தை அழிக்கும். மஞ்சள் கல் எதற்கும் பயன் தராது . அனைத்திலும் மேலானது மஞ்சள் கல் மட்டுமே.
சுண்ணம் , களங்கு முதலியன செய்ய பயன்படும் சிறிய கருவியே மூசை எனப்படும். இது நகை உருக்க இப்போது பயன்படுவதை போன்ற அமைப்பை உடையதாகும். இதில் மணல், கரி , சாம்பல் களிமண் , தேங்காய் நார் , சேர்த்து செய்வது மண் மூசை எனவும் , களிமண் , அயக்கிட்டம் , சனல் , தார் , உமிக்கரி , அடுப்புக்கரி சுண்ணாம்பு இவை சேர்த்து செய்வது வச்சிரமூசை எனவும் கூறப்படும். இவைதவிர உருக்குக்குகை பஞ்ச சுண்ண குகை , பஞ்ச பூதக்குகை என வேறு சில மூசைகளும் உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக