நோயும் - சிகிச்சையும் :-
குழந்தைகளின் கிரந்திக்கு மருந்து என்ன ?
பிறந்து மூன்று திங்கள் வரை முக்குற்றக்கலப்பால் குழந்தைகளுக்கு கிரந்தி நோய் பற்றுகிறது. இதில் குழந்தை விடாமல் அழுது தொண்டை கட்டி பூனை போல் குரலிடல் , வயிறூதி கையில் தாங்காமல் துள்ளுதல் , சிவப்பு நிறக் கொப்புளங்கள் , வாய் வறண்டு உதடு கறுத்து வருந்தி அலறுதல் , முகம் வாடி உடல் முறித்து விம்முதல் , முலையுன்னாமை முதலிய குறிகள் காணும்.
இதற்கு மருந்து :- விளக்கெண்ணை - தேங்காய் பால் , செம்பருத்தி பூ , இலை சாறு , வகைக்கு படி ஒன்று கூட்டி காய்ச்சி வடித்து , அதில் சுக்கு , திப்பிலி , கிராம்பு , ஏலம் , பூரம் , மிளகு , வகைக்கு ஒரு விராகன் பொடித்து கலந்து அரைசங்களவில் தினம் இரு வேளைக்கொடுக்க சகல வகையான கிரந்திகளும் தீரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக