திங்கள், 6 பிப்ரவரி, 2012

சீரணம் நடைபெறும் விதம்

சீரணம் எவ்வாறு நடைபெறுகின்றது ? 

           நாம் உண்ணும் உணவு முதலில் வாயிலுள்ள பற்களால் மெல்லப்பட்டு , உமிழ் நீருடன் கூடி விழுங்க , மிடற்றுக்குழல் வழியே இரைப்பையை அடைந்து அங்கு பிசையப்பட்டு திரண்டு வர , இரைப்பையின் உட்புறம் உண்டாகும் புளிப்பு நீருடன் கலந்து நரை நிறமான பாகாக சமைந்து : துணைக்குக்கிகுட் சென்று அங்கு பித்த நீர் - கணைய நீர் இவற்றுடன் கலந்து பால் நிறமாகவும் , மலமாகவும் மாறுதலுற்று , சிறு குடலை அடையும். அங்குள்ள சிறு குழல்கள் அன்ன சாரத்தை மட்டும் உறிஞ்சி காரை எலும்பிற்கு பின்னாலுள்ள நாளத்தில் செலுத்த அங்கிருந்து சுவாசப்பை நாளத்தினுட் சென்று  சுவாசக்காற்றுப் பட்டு குருதியாக மாறும் . சக்கை பொருளாகிய மலம் பெருங்குடலுக்குள் சென்று ஆசனத்தின் வழியே வெளியேறும். இதுவே சீரணம் ஆகும்.,

1 கருத்து: