சனி, 11 பிப்ரவரி, 2012

சரக்கு முடிக்கும் காலம்

சரக்கு முடிக்கும் காலம் யாவை ? 
             
                              சித்த முறைப்படி மருந்து சரக்குகளை இன்னின்ன காலங்களில் தான் செய்து முடிக்க வேண்டும் என வகுத்துள்ளதே சரக்கு முடிக்கும் காலம் எனப்படும் . குறிப்பிட்ட பருவகால மாதங்களில் முடிக்க பெறாத குறிப்பிட்ட 
 மருந்துகள் - முறை பிறழாமல் செய்யப்படினும் கூட , மூலப்பொருட்களின் குண பேதகத்தால் - பயனின்றி போகவோ அல்லது  சிறந்த  குணம் தராமல் போகவோ கூடும் . 

மருந்து செய்ய ஏற்ற காலங்களாவன :-

1 . தை - மாசி - ( சனவரி - பிப்ரவரி )    - பற்பம்  - சுண்ணம் முதலிய குரு மருந்துகளை செய்து முடிக்க வேண்டும். 

2 . பங்குனி - சித்திரை - ( மார்ச்- ஏப்ரல் ) - இதில் செய நீர் வாங்க வேண்டும்.

3 . வைகாசி - ஆனி ( மே - சூன் ) - இதில் இராசக்குளிகைக்கு சாரணை ஏற்றலாம்.

 4 . ஆடி - ஆவணி ( சூலை - ஆகஸ்ட் ) - இதில் வாலில் திராவகம் வடிக்கலாம் 

5 . புரட்டாசி - ஐப்பசி ( செப்டம்பர் - அக்டோபர் ) - இதில் செந்தூரம் முடிக்கலாம். 
 

6 . கார்த்திகை - மார்கழி ( நவம்பர் - டிசம்பர் ) இதில் உருக்கினங்களை செய்யலாம். 


மேற்கூறியவாறு செய்யும் மருந்துகள் முழுப்பயனையும் நல்கும் .  

2 கருத்துகள்: