பத்தியம் என்றால் என்ன ?
சித்த மருத்துவ முறையிலும் மற்றும் ஏனைய மருத்துவ முறையிலும் பத்தியம் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள் . ஆனால் என்ன பத்தியம் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது . அது இது என்று ஏக மழுப்பு மழுப்புவார்கள் . இதோ இங்கு பத்தியத்திற்கான சில முறைகள் விளக்கப்படுகின்றது .
பொதுவான பத்திய விதிமுறை என்பது என்ன ?
பொதுவாக வாயு - வயிற்று கோளாறுகளுக்கு - உருளைக்கிழங்கு , வாழைக்காய் , மொச்சை - அவரை வகை - உளுந்து - கத்திரி - மாவுப்பண்டங்கள் - கோசு - செவ்வாட்டு மாமிசம் - சேவல் கறி - முட்டை முதலிய வாயுப்போருட்களை நீக்க வேண்டும் .
குருதி - சீதக் கழிச்சல் முதலியவற்றிற்கு - மிளகாய் - மீன் - கோழி - உப்பு - கடின உணவு - முதலிய மிகு காரமான , உஷ்ணமான பொருட்களையும் நீக்க வேண்டும் .
சரும நோய்களுக்கு - மீன் - கருவாடு - பயறு வகை - கத்தரி - சோளம் -செம்மறியாட்டுக்கறி - சேவல் மாமிசம் - கம்பு முதலிய கரப்பான் பொருட்களை நீக்க வேண்டும் .
சோகை - காமாலை - பாண்டு - பெரு வயிறு முதலியவற்றிற்கு - உப்பு - கடுகு - நல்லெண்ணை - மாமிசம் - புளி - மது வகை - கிழங்கு - காய் - பயறு - முதலிய வாயு - கரப்பான் பொருட்களை நீக்க வேண்டும் .
மூலம் - பௌத்திரம் முதலியவற்றிற்கு - மிளகாய் - புளி - கடுகு - நல்லெண்ணை - மது வகை - கேப்பை - அலைச்சல் - தூக்கம் முதலிய உஷ்ணமானவற்றையும் முறையே நீக்க வேண்டும் .
பொதுவாக எப்பிணிக்கும் மிகுவேலை - அலைச்சல் - புளி - புகை - மது - இராவிழித்தல் - மனக் கவலை - அதிக சிந்தனை - பகலுறக்கம் - மந்த குணப்பொருட்கள் - ஆகியவற்றை நீக்க வேண்டும் .
பத்தியம் வைப்பதும் - நீக்குவதும் பண்டிதற்கு அழகு
பயனுள்ள தகவலுக்கு நன்றி ...
பதிலளிநீக்குபயனுள்ள தொகுப்பு - நன்றி
பதிலளிநீக்கு