வியாழன், 8 மார்ச், 2012

கால் ஆணிக்குரிய மருந்து என்ன ?

கால் ஆணிக்குரிய மருந்து என்ன ?

                                   மேக நோயினருக்கு பிறத்தல் , மிகு புணர்ச்சி , சத்து உணவின்மை , அழுகிய மற்றும் கரப்பான் பொருளை அதிகம் உண்ணல , அசுத்த நீரைப்பருகுதல் , காலில் செருப்பின்றி சுடு வழி நடத்தல் , பாதத்தில் கல்லளுத்தி காய்த்தல் , குருதிக்கேடு , முள்ளோ - கல்லோ - பீங்கானோ காலில்குத்தி உட்சென்றதை எடுக்காமல் விட்டு விடுதல் சில வகை விஷக்கடி முதலிய காரணங்களால் , மஜ்ஜை தாது கெட்டு நொந்து பித்தநீரும் கூடி காலாணி நோய் ( புற்றுக்கால் ) வருகின்றது...

                                   இதில் பாதத்திலும் , விரல்களின் அடியிலும் தடித்து கடினமுற்று முளை கிளம்பி வளர்ந்து வரும். மிக வேதனையுடன் புண்ணாய் நோதல் , எதிலாவது இடித்து விட்டால் மயிர் சிலிர்க்குமளவுக்கு வலித்தல் , புனர்ச்சியிலிச்சை , கிளம்பி வரும் முளையை வெட்ட வெட்ட வளருதல் , மழை பெய்யும் முன் ஒரு வித நோவு காணல் ,பலவீனம் , தூக்கம் குன்றல் , தாது நட்டம் , மலநீர்க்குற்றம் , முதலிய குறிகள் கண்டு நீண்ட நாளைக்கு நீடித்திருக்கும்.

                                  காலாணிக்கு மருந்து :- வசம்பு , மருதோன்றி ,மஞ்சள் , துத்தம் இவை பத்து  கிராம்  வீதம் தூளாக்கி நூறு மிலி விளக்கெண்ணை யில் இட்டு காய்ச்சி வடித்து காலானியில் பூசி வர குணமடையும். ( இருப்பினும் உள் மருந்து கொடுக்காமல் முழுப்பயன் கிட்டாது ) .. உள்மருந்து :- புற்றுப்பதங்கம் - இரசகந்தி மெழுகு -  இடிவல்லாதி மெழுகு -- அயவீர செந்தூரம் ஆகியன உட்கொள்ளலாம்.      

9 கருத்துகள்:

  1. தற்போதைய மருத்துவத்தில், எந்த மருந்தும் உட்கொள்ளாமல் ஆணி குண படுத்தபடுகிறது. நீர்ம நைட்ரஜந காலில் அடித்து, ஆணியை மைனஸ் டிகிரி வெப்ப நில்லைக்கு கொண்டு சென்றுவிடுகிறார்கள். இதே போல் மூன்று அல்லது நன்கு தடவை செய்தால், கால் ஆணி தழும்பு இல்லாமல் மறைந்துவிடுகிறது..

    பதிலளிநீக்கு
  2. @Hari Haran PS
    நீங்கள் சொல்வது சரிதான் . அப்படி செய்து எந்த பிரச்சினையும் இல்லாதவர்களை நீங்கள் கண்டிருக்கிறீர்களா . ஏன் எனில் சில ஐந்து வருடங்கள் கழித்து அந்த பிரச்சினை மீண்டும் முளைக்கும்.

    பதிலளிநீக்கு
  3. எனக்கு கால் ஆணி ஏற்பட்டு, மேற்கண்ட முறையில் சேரி செய்தேன்.. எட்டு ஆண்டுகளாகி விட்டது. எந்த பிரச்னையும் இல்லை.. Liquid nitrogen பயன் படுத்தாமல் வேறு amomium oxide or other cooling chemicals பயன் படுத்தினால் குணம் அடையாது...

    பதிலளிநீக்கு
  4. @Hari Haran PS
    Sir, i have been suffering from foot corn last 25 years and got operated twice and undertook all types of medicines, but no use. please inform me about 'liquid nitrogen treatment' and treatment centre in Chennai to my email id. siddhajanani@gmail.com

    பதிலளிநீக்கு
  5. Kindly inform me where I can get treatment for Kal AAni, using Liquid Nitrogen.
    melurskm@gmail.com

    பதிலளிநீக்கு
  6. Kindly inform me where I can get treatment for kalithu aani. Using liquid nitrogen.
    venish283@gmail. Com

    பதிலளிநீக்கு
  7. Kindly inform me where can i get Kalaani ,using liquid nitrogen, my daughter is suffering a lot.
    sbmpp1997@gmail.com

    பதிலளிநீக்கு
  8. kindly inform me where can i get treatment for kalaani using liquid nitrogen

    பதிலளிநீக்கு