திங்கள், 19 மார்ச், 2012

சுவை மூலம் விஷக்கடியை அறிவது எப்படி ?

சுவை மூலம் விஷக்கடியை அறிவது எப்படி ?

                            தீண்டிய நச்சுயிர்கள் காணாவிடின் கடியுண்டவனுக்கு சில பொருட்கள் கொடுத்து அதன் சுவை மாற்றத்தின் மூலம் தீண்டியவற்றை அறியலாம். பாம்புக்கடி பட்டவனுக்கு ஆடுதீண்டாப்பாளை வேரை  உண்ணும்படி கொடுக்க அதன் சுவை மாறி தித்திப்பின்  - நல்லப்பாம்பு , முதலில் இனித்து பின் துவர்த்தால் --மூக்கன்,  மிகவும் புளித்தால்--வழலைசாதி--வளவளுத்து புளித்தால் --கருவழலை -- மயக்கத்துடன் காரமாயிருப்பின் - மயக்கரவு - - நினைத்த சுவை தோன்றின் - புடையன் -- முட்கீரை சுவையிருப்பின் - மண்டலி , - புளித்து பின் காரமாயிருப்பின் - பெரு விரியன் , தலை நடுக்கினால் - விரியன் சாதி -- நா கடுகடுத்தால் - கொம்பேறி மூக்கன் -- , நாவு சுருட்டினால் - சுருட்டை - உள்நாவு சர சரத்தால் சாரை - கண்மறைத்து நெஞ்சடைப்பின் - கல்நெஞ்சன் -- தூக்கமின்றி நெஞ்சு படபடப்பின் - சவடி --சுரனயற்று இருப்பின் - இரு தலை மணியன் -- பல் கடுத்தால் - செய்யான் -- சல சலவென மூக்கு எறிந்தால் - எலிச்சாதி  மேல் நாவு நொந்தால்  - நச்செலி - வாந்தியானால் --அரணை- - கண் காது அடைத்தால் - சில்விடம் -- முதலியன முறையே தீண்டியுள்ளன எனவும் :: கசந்தால் - ஒருவித நஞ்சுமில்லை  எனவும் உணரலாம் . 

                            ஆடுதீண்டாபாளை - ஆகாசக்கருடன் -- நாகதாளிக்கிழங்கு ஆகியவை இருக்கும் ( வைத்திருக்கும் ) இடங்களில் நச்சுயிரிகள் அண்டாது ..........

3 கருத்துகள்:

  1. அட ...என்னங்க நீங்க...பாம்பு கடித்த வுடன் ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு போகாம...என்ன வேலை இது....

    பதிலளிநீக்கு
  2. வியக்க வைக்கும் சித்த மருத்துவ தகவல்கள்...

    உங்கள் பதிவுகளை http://www.hotlinksin.com/ இணையதளத்தில் பகிர்வதன் மூலம் ஏராளமான வாசகர்களைப் பெறலாம்.

    பதிலளிநீக்கு
  3. @Kovai Neramஅந்த காலத்துல ஏதுங்க ஆஸ்பத்திரி ......... ஏதோ இப்படியெல்லாம் தெரிஞ்சுக்கலாம் ....அவ்வளவுதான் ..

    பதிலளிநீக்கு