8. காசம் ( இருமல் ) 9. இளைப்பு ( ஆயாசம் ) :-
காசம் என்ற ஈளை இருமலை அடக்கினால் ( இதற்கு இளைப்பு என்றும் பொருள் உண்டு ) - கடும் இருமல் காணும் . மூச்சு காற்றில் கெட்ட மனம் வீசும் . மேலும் இருதய நோயும் காணும் . இளைப்பை அடக்கினால் மிக்க வெப்பம் உண்டாக்கி அதனால் நீர்மேகம் , குன்மம் , மூர்ச்சை , குளிர் முதலியன காணும் . தும்மலை அடக்குவதால் உண்டாகும் நோய்களும் கூட காணும் .
10 . தூக்கம் ( நித்திரை ) :-
இயற்கையாய் தச வாயுவில் ஒன்றாகிய தூக்கத்தை அடக்கினால் நாள்தோறும் தலைக்கனம் , கண் சிவந்து பீழை கட்டி எரிதல் , செவிட்டு தன்மை , தெளிவற்ற சொல் , சோம்பல் முதலிய பிணிகள் வந்து சேரும் .
11. வாந்தி ( சத்தி - வமனம் )
இயற்கை மாறுபாட்டினால் ஆன வாந்தியை தான் முயற்சியினால் அடக்கினால் - புழுக்கடியினால் காணும் தடிப்பு , குட்டம் , நமைச்சல் , பாண்டு , கண்நோய் , பித்த விட பாகம் , இரைப்பு சுரம் , இருமல் ஆகியன ஏற்படும் ..
12 . விழிநீர் ( கண்ணீர் )
கண்ணில் இருந்து வரும் நீரை அடக்கினால் தமர வாயு , பீநசம் , கண்நோய் , தலையில் புண் மற்றும் அப்புண்ணில் வாயு கூடினால் குன்மநோய் முதலியன காணும் .
13. சுக்கிலம் ( விந்து )
அபான வாயுவினால் வெளிப்படும் விந்துவை அடக்கினால் சுரம் , நீர்க்கட்டு , கை கால்கள் , கீல்கள் , இவற்றில் நோய் , விந்து கசிந்து ஆடை நனைதல் , மார்படைப்பு , வெள்ளை ஆகியன உண்டாகும் .
14. சுவாசம் ( மூச்சு )
பிராண வாயுவின் செயல் ஆன சுவாசத்தை அடக்கினால் இருமல் , வயிற்று பொருமல் , சுவை அறியாமை , குலை நோய் , சுரம் , வெட்டை , முதலியவை விளையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக