மூலிகை சாப நிவர்த்தி
பொதுவாக நாம் கேள்வி பட்டிருப்போம் .. மூலிகை சாப நிவர்த்தி செய்து தான் எடுக்க வேண்டும் என்று. அது என்ன - சாப நிவர்த்தி என்பது எப்படி ? அதற்கு என்ன மந்திரம் சொல்வது ? என்பதெல்லாம் புரியாத புதிராகவே இருக்கும். யாரும் சொல்ல மாட்டார்கள் ...இதோ அதை பற்றிய விளக்கங்கள் .. மூன்று பாகங்களாக...
பொதுவாக நமது கண்களுக்கு சாதாரணமாகவும் , அமைதியான சடப்பொருளாகவும் காட்சியளிக்கும் தாவர வகைகள் யாவுமே , உண்மையில் அதனதன் இயற்கை தன்மைக்கேற்ப , எளிய மருத்துவ குணத்தில் இருந்து அரிய சக்தி வரை தன்னகத்தே கொண்டவை ஆகும். இவற்றின் துணையின்றி , சித்தர்கள் செப்பியுள்ள மணி , மந்திரம் , மருந்து உள்ளிட்ட எந்த ஒரு கலையினையுமே அடையவியலாது. நாம் உயிர்வாழ உணவாக பயன்படக் கூடியவற்றுள் மிகுதியானது தாவர இனப்பொருட்களே ஆகும் . வைத்திய , வாத , யோகா , ஞான , கல்பம் உள்ளிட்ட அனைத்து சித்திகளையும் பெற உறுதுணை புரிவது மூலிகைகளேயாகும். இவற்றிக்கு உயிர் மட்டுமல்ல. உணர்வுகளுமுண்டு . இன்றைய விஞ்ஞானமும் அதை ஏற்றுக்கொண்டுள்ளது .
நிற்க. மூலிகைகள் யாவுமே மனித குல பயனுக்காகவே படைக்க பெற்றிருபினும் கூட - அவற்றிற்கு உயிரும் உணர்வும் உண்டு என்ற அடிப்படையில் நோக்குகையில் அவற்றை நாம் கைக்கொள்ளும் முன் அவற்றின் சாபத்தை நிவர்த்தி செய்ய வேண்டியது கட்டாயமாகும் . மூலிகைகளை நம் வசம் ஆக்கும் முன் அவற்றிற்கு "" இவனால் நமது ஆயுள் முடிகின்றதே "" என்ற ஏக்கமும் பயமும் சினமும் ஏற்படாமலும் , நம்மை நாடி யாசிக்கும் இவனுக்கு நமக்குரிய சக்த்திகள் எல்லாம் அளித்து உதவ வேண்டியது நமது கடமை ஆகும் " என்ற நல்லெண்ணமும் ஏற்பட வேண்டியது மிக அவசியமாகும் . இதோடு சித்தர்களால் - உரிய பயன் அளிக்காதவாறு மூலிகைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சாபமும் விலக்கபடவேண்டும் . இவை அனைத்திற்கும் பொருந்தும் எனினும் - சில முக்கியமான சாதனைக்குரிய - உயர்வகை மூலிகைகளுக்காவது இந்த முறைகளை கடைபிடிக்க வேண்டுவது அத்தியாவசியமாகிறது . அதற்குரிய சில வழிமுறைகளையும் , சில மந்திரங்களையும் சித்தர் பெருமக்கள் நமக்கு அருளி உள்ளார்கள். அவற்றை கடைபிடித்தலேயன்றி முழுப்பயனையும் நாம் அடையவியலாது என்பது திண்ணம் . அடுத்து வரும் பாகத்தில் சாப நிவர்த்தி வழிபாடுகளை காணலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக